கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு மீண்டும் திறப்பு!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இந்த பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கடந்த வாரம் போலவே அடுத்த வாரமும் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.போக்குவரத்து சிரமம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால், அதிபர்கள் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.மேலும் போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்த நாள் தனியார் விடுமுறையாக கருதப்படாது என்றும் கல்வி அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.