பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: மாணவர்கள் பலர் காயம்

ஹங்வெல்ல (Hungwella) பகுதியில் தனியார் பேருந்து மற்றும் சிசு செரிய பாடசாலை மாணவர் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று (19.06.2024) பிற்பகல் இரண்டு மணியளவில் ஹங்வெல்ல - ரணல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர் காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.