சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய பதில் அத்தியட்சகராக அர்ச்சுனாவை கடந்த June மாதம் மத்திய அமைச்சு நியமனம் செய்து அனுப்பியிருந்தது.
அதன்பின் தொடர்ந்த பிரச்சனைகளின் பின் மாகாண சுகாதார அமைச்சு அர்ச்சுனாவை தமது திணக்களத்திற்கு தற்காலிக மாற்றம் வழங்கியும் ரஜீவுக்கு புதிய பதில் அத்தியட்சகராக நியமனம் வழங்கியும் இருந்தது.
இதனை அர்ச்சுனா ஏற்காத நிலையில் மத்திய அமைச்சின் அறிவுறுத்தலில் விடுமுறை அறிவித்து அர்ச்சுனா கொழும்பு செல்கிறார் . இதன் பின் மாகாண சுகாரதார அமைச்சு சிபார்சில் மத்திய அமைச்சு மீள புதிய அத்தியட்சகராக ரஜீவை நியமித்து நியமனக்கடிதத்தை வழங்கியிருந்தது.
அதன் பிரகாரம் அர்ச்சுனா ஒன்றில் மத்திய அமைச்சுக்கு உள்வாங்கபட்டிருக்கப்பட வேண்டும் அல்லது மாகாண திணைக்களத்திற்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது வேறு ஏதாவது நியமனம் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
இதுவரை அவருக்கு கடித மூலம் நியமனம் வழங்கப்படவில்லை என அர்சுனா கூறுகின்றார் ஆனால் மத்திய அமைச்சினால் அவரை விடுவித்து தம்மிடம் அனுப்புமாறு மாகாண பணிப்பாளருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளமை உறுதி செய்ய முடிந்தது.
அவருக்கு விசாரணைகள் தொடர்வதால் நியமனம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அதில் கூறப்படுகின்றது.(அக்கடிதம் சிங்களம் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அர்ச்சுனா ஏற்க மறுக்கிறார்)
பதிவு புத்தகமே முக்கிய ஆவணம் என்ற நிலையில் அர்ச்சுனா விடுப்பில் செல்லும் போது வைத்திய சாலையில் பேணவேண்டிய பதிவு புத்தகத்தை தன்னுடன் எடுத்து சென்றிருந்த நிலையில் அதை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டு புதிய பதிவு புத்தகத்தின் ஊடாக ரஜீவ் தனது கடமைகளை ஏற்கனவே பொறுப்பேற்றிருந்தாா்.
விடுமுறை முடித்து பதிவுப்புத்தகத்துடன் வந்த அர்ச்சுனா நேராக அத்தியட்சகர் அலுவலகத்தில் நுழைகின்றார் அங்கு கடமையில் ரஜீவ் இருக்கிறார் . அவர் முன் நியமனக்கடிதம் உள்ளது. ரஜீவ் இருந்தவாறே கைலாகு கொடுக்கின்றார்.
அர்ச்சுனா நின்றவாறு இது எனது இருக்கை என நினைக்கின்றேன் என்கிறார் அதற்கு ரஜீவ் இருக்கலாம் ஆனால் எனக்கு கிடைத்த நியமன பிரகாரம் நான் கடமை ஏற்று விட்டேன் என்கிறார் எழுந்து கடிதங்களை எடுத்து கொடுக்கிறார் அவர் எழுந்து நின்று கடிதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார்.
அவற்றை எதையும் சட்டைசெய்யாமல் அல்லது ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்கள் சொல்லி வெளியேறாமல் நீங்களாகவே போவது நல்லது என்று கூறி அர்ச்சுனா ரஜீவின் பின் சென்று கதிரையினை பின் இழுத்து அதில் அமர்ந்து கொள்கிறார்.
இந்நிலையில் ரஜீவ் வேறு வழியின்றி முரண்படாமல் விருந்தினர் இருக்கையில் இருந்து திணைக்களத்திற்கு அழைப்பை மேற்கொள்கிறார் தொலைபேசி Speaker இல் விடப்படுகிறது.
அதன்போது மறுபக்கத்தில் அழைப்பெடுக்கும் அதிகாரியினால் ஏதோ சொல்லப்படுகிறது இதை அர்ச்சுனா கேட்க மறுக்கிறார் அந்த நேரம் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்வருகின்றனர்.
அர்ச்சுனாவை தனியே வருமாறு அழைக்கின்றார் அவர் எழுந்து செல்கிறார் அவர் தனியறைக்கு கொண்டு சென்று ஏதோ விளக்கமளித்த பின் திரும்பி வந்து ரஜீவினை கடமை செய்ய கேட்டுவிட்டு அர்ச்சுனா வெளியேறுகின்றார்.
அர்ச்சுனா தான் தன்னுடைய பதவிக்காலத்தில் கையொப்பமிடவேண்டிய ஆவணங்களில் மட்டும் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகின்றது .ரஜீவின் பொறுப்பேற்றலின் பின் எந்த ஆவணத்திற்கும் அர்ச்சுனாவின் கையொப்பம் தேவைப்படாது.
இன்றைய சம்பவங்களில் ரஜீவ் மிகவும் பொறுமையுடன் கண்ணியமாகவே நடந்து கொண்டிருந்தார் அவரை யாரும் விரட்டவில்லை அர்ச்சுனாவை கண்டு அவர் மிரண்டு ஓடவும் இல்லை தற்போது வரை அங்கு கடமையாற்றி வருகின்றார்.
தற்போது அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் தான் தங்கியிருக்கின்றார் இன்றுஅமைச்சர் செயலாளர்கள் வடக்குக்கு வருகின்ற நிலையில் இது முடிவுக்கு வரும் என நினைக்கின்றேன் அர்ச்சுனாவுக்கு எங்கு நியமனம் என்பதைப் பொறுத்து அடுத்த நகர்வுகள் அமையும்.
சிலர் நடந்த சம்பவங்களை திரித்து காவித்திரிகின்றனர் இதனால் நடப்பு நிலவரம் மாறப்போவதில்லை மாகாண அரசும் மத்திய அரசும் அதிகாரங்கள் சிலவற்றில் ஒன்றை ஒன்று மேவுவதாக உள்ளமை இங்கு அவதானிக்கலாம்.
13ம் திருத்தத்தால் எமக்கு எந்த பயனும் இல்லை என்பது இப்போது புரிகிறதா..!