பாதியில் பாடலை நிறுத்திய ஈழத்து குயில் அசானி... நடுவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி இந்த வாரம் பாடல் பாடிய போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.

வாணொளி மூலம் பாடல்களைக் கேட்டு பாடி பழகிய அசானி இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

தற்போது அசானி தனது தாயின் கஷ்டத்தை நினைத்து இந்த ரவுண்டில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியுள்ளார். ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடும் போது உணர்ச்சிவசப்பட்டு அவரால் பாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நடுவர்கள், பார்வையாளர் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், கவிஞர் சினேகன் அவரை உற்சாகப்படுத்தியதோடு, நடுவர்களும் உற்சாகப்படுத்தினர்.

தற்போது அசானி மூன்றாவது பாடலை முடித்துள்ள நிலையில், பிரபல ரிவியில் மீண்டும் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே அசானி 1 மாத காலம் தாமதமாகவே இந்நிகழ்ச்சிக்கு வந்ததுடன், அவருக்கு ஒரு மாதம் மட்டுமே பிரபல ரிவி பாடுவதற்கு அவகாசம் கொடுத்திருந்தது.

தற்போது அசானி தனது திறமையினால் பிரபல ரிவியில் தொடர்ந்து பாடுவதற்கு சம்மதத்தினை வாங்கியுள்ளார். இந்நிகழ்வு ஒட்டுமொத்த தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.