சென்னை அணியில் சஞ்சு சாம்சன்! 48 மணி நேரத்தில் வெளியாகவுள்ள அறிவிப்பு..

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணி ஆகியவற்றிற்கு இடையில் வீரர்களை மாற்றம் செய்வது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.

 சஞ்சு சாம்சன் - ஜடேஜா

ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆபிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியுள்ளது.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது.

48 மணி நேரத்தில்

இதனையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுத்துள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ரோயஸ் அணி பெறுவதற்கான வர்த்தகத்திற்கு இரு அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.