பெட்ரோலுக்கு பதில் சிறுநீர் விற்பனை - கொழும்பில் நடந்த மோசடி அம்பலம்

நீர்கொழும்பில் பெட்ரோலின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை பெட்ரோல் என தெரிவித்து விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வேலையொன்றுக்காக சென்றவரின் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்ததை அடுத்து அவர் மோட்டார் சைக்கிளுடன் எரிபொருள் நிரப்பு நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் நடந்து சென்றவரை அணுகி பெட்ரோல் தேவையா எனக் கேட்டு தன்னிடம் பெட்ரோல் இருப்பதாக கூறியுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் மோட்டார் சைக்கிளில் சுமார் 375 மில்லி லீட்டர் பெட்ரோலை அவர் ஊற்றியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எரிபொருளை விற்பனை செய்த நபரிடம் 5000 ரூபாயை கொடுத்துவிட்டு மீதி பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அருகில் உள்ள கடைக்கு விரைந்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திடீரென தனது மோட்டார் சைக்கிள் நின்றதை அடுத்து விசாரணை நடத்தியதில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இந்த மோசடியை மேற்கொண்டவர், ‘நாய்’ எனப்படும் பிரதேசத்தில் நன்கு அறியப்பட்ட மோசடி செய்பவர் எனவும், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.