சஜித் பிரேமதாசவின் தாயார், திருநடேசனை சந்தித்தார்- நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!

பண்டோரா இரகசிய ஆவணங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகரான திருநடேசனை நேற்று எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இணக்கங்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் இன்று குற்றம் சுமத்தினர்.

அத்துடன் சுயாதீன உறுப்பினர்கள் ராஜபக்சர்களை பாதுகாக்கும் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சியினர் குறிப்பிட்டனர்.

இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசவின் தாயார், திருநடேசனை சந்தித்தாகவும் எனினும் திருநடேசனுக்கு எதிராக சஜித் பிரேமதாச பேசுவதாகவும் முஸம்மில் குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறுத்த சஜித் பிரேமதாச, முஸம்மிலின் குற்றச்சாட்டு பொய்யானது என்று குறிபி்பிட்டார்.

அத்துடன் இந்த பொய்யான கருத்தை , நாடாளுமன்ற பதிவுப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.