போராட்டக் களத்தில் விரட்டியடிக்கப்பட்ட சஜித்! சம்பவம் தொடர்பில் அவர் அளிக்கும் விளக்கம்

 

நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான தனது போராட்டத்தை குண்டர் தாக்குதல்களால் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஆர்ப்பாட்டக்க காரர்களை  பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற குண்டர்களால் தாக்கப்பட்ட போதிலும் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களின் சார்பாக தொடர்ந்தும் போராடப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.