செல்வந்தர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகையே டொலர் தட்டுப்பாட்டுக்கு காரணம் – சஜித்

நாட்டில் நிலவும் உண்மை நிலையை பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் காரணமாக அரச வருமானம் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதுவே தற்போதைய டொலர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.

அதிகாரிகளின் உதவியுடன் சிலர் பாதுகாக்கப்பட்ட காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களை ஒருபோதும் அனுமதிக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டோம் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.