சச்சினின் சாதனையை முறியடித்த பங்களாதேஷ் வீரர்!

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையை பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்கார் (Soumya Sarkar) முறியடித்துள்ளார்.

இன்றைய தினம் (20) நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்ற இந்த ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த, இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, பங்களாதேஷ் அணியின் ஆரம்ப ஆட்ட வீரர்களாக செளம்யா சர்கார் - அனுமுள் களமிறங்கினர்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி, செளம்யா சர்காரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ஓட்டங்களை குவித்தது.

அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு சதம் அடித்தார்.

22 பவுண்டரி 2 சிக்ஸ்களுடன் 169 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார், இறுதியில் பங்களாதேஷ் அணி 291 ஓட்டங்களுடன் தொடரை முடித்தது.

இந்த சதத்தின் மூலமே நியூசிலாந்து மண்ணில் சச்சினின் சாதனையை செளம்யா முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு சச்சின் 2009ஆம் ஆண்டு இதே நியூசிலாந்துக்கு எதிராக 163 ஓட்டங்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

இந்த சாதனையை தற்போது பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்கார் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், பங்களாதேஷ் அணி வீரர்களில் ஒருவரின் தனிப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களில் செளம்ய சர்கார் 2வது இடத்தினைப் பெற்றுள்ளார், முதலிடத்தில் லிட்டன் தாஸ் (176 ஓட்டங்கள்) உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.