ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணிலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான ரஷ்யா தூதுவரிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இன்று காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதியால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துக் கடிதத்தையும் ரஷ்யா தூதுவர் கையளித்துள்ளார்.ரஷ்யா – இலங்கை உறவுகள் எப்பொழுதும் நட்புறவைக் கொண்டவை என்பதை வலியுறுத்தியுள்ள ரஷ்ய ஜனாதிபதி, இலங்கை மற்றும் ரஷ்ய மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ரஷ்ய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.