ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்திற்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) குற்றவியல் விசாரணை திணைக்கள பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.