பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்களான தாயும் மகனும் குருணாகல் வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபரான தந்தை பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பின்னர் தலதாகம மஹவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய தாயும் 15 வயதுயைட மகனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பெண்களின் கண்களில் மிளகாய் தூளை தூவி அவர்களிடம் உள்ள பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் செல்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.