அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் சாத்தியம் காணப்படுவதனால் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணை உடைப்பெடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நேற்று காலை முதல் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு அந்த பகுதியிலுள்ள பாடசாலையை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணை உடைப்பெடுப்பதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.