தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியம் எச்சரித்துள்ளது.
நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேல்மாகாண நிறைவு காண் மருத்துவ சேவைக்கு உட்பட்ட சுகாதார பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் இடமாற்ற பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சினைக்கான உடனடி தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக மேல்மாகாண ஆளுநருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் கூட்டமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.