இந்தியாவில் உயரும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளது.இந்தியா முழுவதும்  24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவியுள்ளது.இதேவேளை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் புதிதாக 153 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று கண்டறிப்பட்டதால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 2043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பாதிப்பு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. டெல்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் ஒமிக்ரோன் பரவி வருகிறது. தற்போது புதிதாக மேகாலயா மாநிலமும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.