கொரில்லா செய்த செயலால் நெகிழ்ச்சி : வைரல் வீடியோ




 கொரில்லா ஒன்று செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சுற்றுலா பயணி ஒருவர் உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளார். அவர் கொரில்லா கூண்டுக்கு அருகில் நின்று தனது ஸ்மார்ட்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.
 
ஆனால் கையிலிருந்து போன் நழுவி கொரில்லா கூண்டுக்குள் விழுந்தது.
 
இதனையடுத்து குறித்த சுற்றுலா பயணி கூடையில் கயிறு கட்டி கூடையை கீழே இறங்கினார்.
 
உடனே கொரில்லா அந்த போனை எடுத்து கூடையில் போட்டது. இச்சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.