பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் போராளின - அதிர்ந்து போன இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிரான போர் நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளியாகிகொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் பகலில் ஊடகவியலாளராகவும், இரவில் ஹமாஸின் இராணுவத் தளபதியாகவும் செயல்பட்ட நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

 முகமது வஷா என்ற குறித்த நபர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் அடையாளம் கண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு காசா முனையின் மத்திய பகுதியில் நடந்த அதிரடி நடவடிக்கையில், அவருடைய மடிக்கணினி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது.

 இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதனை ஆய்வு செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அதில், காணப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து அவர், அல்-ஜசீரா ஊடகத்தின் நிருபராகவும், ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தளபதியாகவும் செயல்பட்டு வருகிறார் என தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் லெப்டினென்ட் கேர்னல் மற்றும் அரபிக்கான செய்தி தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறும்போது,

 அண்மை மாதங்களாக அவர் பத்திரிகையாளராக செயல்பட்டார். ஆனால், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.

இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதன்படி, ஹமாஸ் அமைப்பின் பீரங்கி அழிப்பு படை பிரிவின் முக்கிய தளபதியாக இருந்திருக்கிறார். அந்த பயங்கரவாத அமைப்பிற்கான விமான பிரிவுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவில் 2022-ம் ஆண்டு இறுதியில் பணியாற்றி வந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதனால், பத்திரிகையாளர் உடையணிந்து பின்னர் இராணுவ ஆயுதமேந்திய வீரராக செயல்படும் மற்ற நபர்களை பற்றிய விபரங்களையும் நாங்கள் எதிர்வருங்காலத்தில் வெளியிடுவோமா? என்பது தொடர்பில் எங்களுக்கே தெரியவில்லை என அத்ரே தெரிவித்து உள்ளார்.

இதற்காக அல்-ஜசீரா தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தையும், இஸ்ரேல் படை கடுமையாக சாடியுள்ளது.

பாரபட்சமற்ற செய்திகளை உங்களுடைய நிருபர்கள் வழங்கி வருகிறார்கள் என இதுவரை நாங்கள் நினைத்து வந்தோம். ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முன்னிலைப்படுத்தும் வகையில், நீங்கள் அவர்களை உருவாக்கும் பணியில் பங்காற்றுவீர்கள் என நினைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளது.

கடந்த மாதம், காசாவின் ரபா நகரில் நடந்த வான்வழி தாக்குதலில், அல்-ஜசீரா பத்திரிகையாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.