புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் மார்க்கம் திறப்பு..! யாழை வந்தடைந்த போக்குவரத்து அமைச்சர்...!


கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகள் அநுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப்பணிகளுக்காக  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையிலான பரீட்சார்த்த பயண நடவடிக்கை இன்று(13) இடம்பெற்றது.

பரீட்சார்த்த ரயில் பயணத்தில் யாழ்ப்பாணத்திற்கு சுமார்  2.30 மணியளவில் வருகை தந்தது.  இப்  புகையிரதத்தில் வருகை தந்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோரை கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுரேந்திரன் ஆகியோர் இணைந்து வரவேற்றதுடன் அமைச்சருக்கு இளநீரும் வழங்கப்பட்டது

இப் புகையிரதப் பாதை புனரமைப்பு அபிவிருத்திக்காக இந்தியாவினால் நிதியுதவி வழங்கப்பட்டது. இந் நிலையில் கடந்த ஜனவரி 5 ம் திகதி முதல் தடைப்பட்ட சேவைகள் மீள இம்மாதம் 15 ம் திகதி தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது. இதேவேளை நல்லூர் ஆலய திருவிழாவிற்கு பக்தர்களின் வருகையை கருத்திற்கொண்டே மிக விரைவாக இச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை  சுட்டிக்காட்டத்தக்கது.