இதேநேரம் நேற்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டுகொள்கலன்களும் குறித்த 309 கொள்கலன்களுடன் விடுவிக்கப்பட்டவை அல்ல என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுதொடர்பில் சுங்கத்திணைக்களம் கூட அறிவிப்பொன்றை வெளியிடாத நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்வாறு இதனை தெரிவிக்கமுடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி .முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தகொள்கலன்
அந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம்எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ள 309 கொள்கலன்களில் 151சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கொள்கலன்களும் 158 மஞ்சள் ஸ்டிக் கர் ஒட்டப்பட்ட
கொள்கலன்களும் உள்ளன. இந்த கொள்கலன்கள் அனைத்தும் சுங்க சட்டத்தின்பிரகாரம் ஸ்கான் பரிசோதனை, பௌதிகபரிசோதனை இல்லாமலே விடுவிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ் போதைப்பொருள்அடங்கிய இரண்டு கொள்கலன்கள் சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது ஜனவரி 21ஆம் திகதிவரை 109 கொள்ககலன்களே விடுவிக்கப்பட்டுள்ளன,
எஞ்சிய 200 கொள்கலன்களையே ஜனவரி 31ஆம் திகதிவரை விடுவித்திருக்கின்றன. இவ்வாறே இந்த 309 கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த காலப்பகுதியில் ஏற்பட்டிருந்த கொள்கலன்களின் நெருக்கடி நிலை செயற்கையாக ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதியின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த கொள்கலன்களை சாதாரண முறையில்விடுக்க முடியுமாக இருந்ததாவும் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐஸ்போதைப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்களும் குறித்த309 கொள்கலன்களுடன் விடுவிக்கப்பட்டவை அல்ல என பொலிஸ் ஊடக பேச்சõளர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இதுதொடர்பில் சுங்க திணைக்களம்கூட அறிவிப்பானெ“றை வெளியிடாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்வாறு இதனை தெரி விக்க முடியும்?குறித்த 2 கொள்கலன்களும் அந்த 309 கொள்கலன்களுடன் தொடர்பு இல்லை என கண்டுபிடித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என்ன என தேடிப் பார்க்குமாறு தெரிவித்து 3மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு இன்னும் பதில் கூறவில்லை..
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியைப்பொறுத்தவரை எப்போதும் ஆட்சியில்இருக்கும் அரசாங்கத்தை பாதுகாக்கும்வேலையையே செய்கிறது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களிலும் அவ்வாறுதான்இடம்பெற்றிருக்கிறது
அத்துடன் ஜனாதிபதியின் விசாரணைக்குழு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சுங்கத்தின் முன்னாள் உதவிபணிப்பாளர் நாயகமே தற்போது சுங்கத்தின்பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை,ஊழல் மோசடி தொடர்பில் கதைக்கும் அரசாங்கம் எவ்வாறு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை உயர் பதவிக்குநியமிக்க முடியும்? அப்படியானால் அவர்ஜனாதிபதியின் செயலாளரின் நண்பராக இருக்கவேண்டும்.
எனவே விடுவிக்கப்பட்டுள்ள 309 கொள்கலன்கள் தொடர்பில் முறையாக விசாரணைமேற்கொண்டு அந்த கொள்கலன்களில்இருந்த பொருட்கள், அந்த கொள்கலன்களின் உரிமையாளர்கள் யார் என்ற விடயங்களைஇந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும் ஆனால்அரசாங்கத்துக்கு அதனை மேற்கொள்ளமுடியாமல் போயுள்ளது என்றார்.
இதேநேரம் பாராளுமன்றில் நேற்று கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி
323 கொள்கலன்கள் விடுவிப்பு இன்று வரை சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் உண்மையை வெளிப்படுத்தவில்லை.
இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப்பொருள் மூலப்பொருட்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இது தொடர்பில் ஏன் துரிதகரமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள் பற்றி பல மணித்தியாலங்கள் பேசும் அரசாங்கம் ஏன் இதனை கருத்திற் கொள்ளவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் பெயர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளதால் தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். கத்தோலிக்க சபை இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்;கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால் பர விடயங்கள் வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.உண்மை வெளிவருவதை அரசாங்கம் விரும்பவில்லை. குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இப்ராஹிம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானை சிறையில் அடைத்து விட்டு விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுக் கொண்டு குண்டுத்தாக்குதலின் உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு கிடையாது.புதிய பாப்பரசரை வெகுவிரைவில் சந்தித்து அரசாங்கத்தின் செயற்பாட்டை எடுத்துரைப்போம் என்றார்.