அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச!

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கோதுமை மா 96 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செமண் டின் ஒன்றின் விலை 105 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் புதிய விலை 585 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.நெத்தலி ஒரு கிலோ 200 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெத்தலியின் புதிய விலை 1300 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம் சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் புதிய விலை 398 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.