பல்கலைக்கழகத்திற்கு அருகில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இலட்சக்கணக்கான பணமும் மீட்பு

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியான டுபாய் கபிலாவுக்கு சொந்தமான பெருந்தொகை போதைப்பொருளை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
13 கிலோ ஹெரோயின், 6 கிலோ ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் என்பன கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களில் அடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பொதியில் 1.5 மில்லியன் ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.