இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்

கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

குறித்த சர்ச்சைக்குரிய தகவலை தயாசிறி ஜயசேகர நேற்று(14) இடம்பெற்ற கோப் குழுவில் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வீரர்களுக்கு மருந்துகளை வழங்கிய வைத்தியர் தொழில்முறை விளையாட்டு மருத்துவர் அல்ல என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் , வைத்தியரால் போடப்பட்ட தடுப்பூசியால்  இலங்கை வீரர்களின் பாதங்களில் பல்வேறு கோளாறுகள் தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த வைத்தியர் வலிநிவாரணி மருந்துகளை வழங்கி வீரர்களுக்கு நீண்டகால நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.