உங்கள் செல்போன் வெடிப்பதை தடுக்கனுமா?

சமீபகாலத்தில் செல்போன்கள் வெடிப்பது அதிகமாகி வருகின்றது.செல்போன்கள் வெடிப்பதை தடுக்கவும், அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். செல்போன்களில் வெடிக்க கூடிய சாதனம் பேட்டரி தான். இது வெடிப்பதத்துக்கு முக்கிய காரணம் உங்கள் போனின் சர்ஜரை கொண்டு சார்ஜ் போடாமல் பிறரின் செல்போன் சர்ஜரை பயன்படுத்துவதாகும். பேட்டரின் திறன் அனைத்து போன்களிலும் ஒன்றாக இருக்காது. ஒவ்வரு போன்களிலும் பேட்டரின் திறன் மாறுப்படும். அந்த திறனுக்கு ஏற்றவாறு வோல்ட் மதிப்பு கொண்ட சார்ஜ்ர்களை போனுக்கு வழங்கப்படுகின்றன. அந்த ஒரிஜனல் சார்ஜ்ர்களை பயன்படுத்தும் போது பேட்டரின் வெப்பநிலையில் மாற்றம் எற்ப்படுவதில்லை. இதன் மூலம் வெடிக்காமல் பாதுகாக்கலாம். அடுத்ததாக சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசக்கூடாது. சார்ஜ் போட்டு அழைப்புக்களை பேசும் போது உங்கள் செல்போன்னுக்கு அதிக சிக்னல் தேவைப்படுகின்றது. அதனால் சார்ஜ் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகின்றது.இதன் மூலம் பேட்டரின் வெப்பநிலை  உயர்ந்து கொண்டே சென்று தீடிர் என வெடித்து சிதறும்.எனவே எவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம்.