முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலியே ரத்ன தேரர் தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த அரசாங்க காலத்தில் கரிம கழிவுகளை கொண்டு வந்து முழு நாட்டையும் அழித்தவர் ரத்ன தேரர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அந்த சக்திவாய்ந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு உரக் கொள்கை ஒரு தீர்க்கமான விளைவைக் கொடுத்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனவே, ரத்ன தேரருக்கு தெரியாத கஞ்சா தோட்டம் பற்றி பேச வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.