இலங்கையில் புதிதாக பரவி வரும் எலிக்காய்ச்சல்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.நோய் நிலைமை தொடர்பாக கவனத்திற்கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என காலி மாவட்ட சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி தெரிவித்துள்ளார்.தற்போது வயல் பகுதிகளை அண்டமித்து வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களும் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.