ரணிலுக்கு 12 வருட ஆட்சி! லட்சக்கணக்கில் வாக்குகளை குவிக்கப்போவதாக ஆருடம் |


இலங்கையை எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு இலங்கை சக்தி வாய்ந்த நாடாக மாறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் நூறு லட்ச வாக்குகளை பெற்று தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் என தாம் கேலிக்கையாக கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

அதிபர் என்ற பதவிக்கு அப்பால் ரணில் விக்ரமசிங்க ஒரு சிறந்த பொருளாதார நிபணர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாக கொண்டு சிறிலங்காவின் அதிபராக அவர் செயல்படுவதாக வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அடுத்து நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் இலங்கையின் வரலாற்றில் வேறு எந்தவொரு தலைவரும் பெற்றிராத வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க வெற்றியடைவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.