6 தடவையாக ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றார்

ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்க போவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள்ள நிலையிலும், புதிய பிரதமரின் கீழ் ஆட்சி அமையவில்லை. இந்நிலைமை நீடித்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் வங்குரோத்தடையும். அதேபோல இராணுவ பிரசன்னமும் அதிகரிக்கப்பட்டால் சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் பதவியை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்பதற்கு, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனை சஜித் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 19 ஐ மீள செயற்படுத்தும் நிபந்தனையுடன் – நாட்டு நிலையைக் கருதி, பதவியை ஏற்பதற்கு ரணில் சம்மதம் தெரிவித்துள்ளார்.