முடியாவிட்டால் விலகி செல்வேன்!! ரணில் பகிரங்கம்


அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

21 ஆவது திருத்தம் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

21வது திருத்தம் குறித்து ரணில்

"21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு வருகின்றார். இவ்வாரத்தில் கட்சி தலைவர்களுக்கு முழுமையான வரைபு அனுப்பி வைக்கப்படுவதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படும்.

எந்தவொரு அமைச்சு பதவிகளுக்கும் ஊதியமோ கொடுப்பனவோ வழங்கப்பட மாட்டாது. அதே போன்று சுதந்திர கட்சிக்கு உரிய இராஜாங்க அமைச்சுக்கள் குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாரம் தீர்மானிப்பார்" எனக் குறிப்பிட்டார்.