ரணில் விக்கிரமசிங்கவின் வீடு முற்றுகை- களமிறக்கப்பட்டுள்ள கலகத் தடுப்பு காவல்துறை!

கொழும்பில் முன்னாள் பிரதமர் ஒருவரின் வீட்டிற்கு முன்னாலும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று காலை முதல் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கொழும்பில் உள்ள முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாகவே தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.