நேற்றிரவு இரகசியமாக மஹிந்த, மைத்திரி கட்சியினரை சந்தித்த ரணில் : காரணம் இதோ

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பன இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன.

இதற்கான முன்னோட்ட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்றிரவு(02) நடைபெற்றது.

இச்சந்திப்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், புதிய கூட்டணிக்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் நடைபெற்றுள்ளன.

இதேவேளை அடுத்துவரும் நாட்களில் கட்சிகளை தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவார் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஆதரவளிக்குமாறு தோழமைக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.