நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள விரும்பும் ரணில்

 

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க தாம் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வை நாடாளுமன்றத்துக்குள் நடத்தவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், நாடாளுமன்றில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு எதிராக போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தியே தாம் தேர்தலில் போட்டியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.