தந்திர முறைகளை கையாளும் ரணில் (Ranil Wickremesinghe) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இந்தியாவிற்கு வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஜனாதிபதி மீது அவதூறு பரப்பும் நடவடிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் மேற்கொண்டுள்ளார்களாம்.
முன்னாள் ஜனாதிபதி என பெருமை பேசிக் கொண்டு, நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தை பல மேடைகளில் பகிரங்கமாக ரணில் விமர்சித்து வருகின்றார்.
எனினும், அநுரவின் பல திட்டங்களின் பின்னால் ரணில் ஆலோசனை வழங்கி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களால் அகற்றப்பட்டவர்
ரணில் விக்கிரமசிங்க, அரசியலில் இருந்து மக்களால் அகற்றப்பட்டவர் என்ற வகையில் மேலும் தந்திரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளன
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று சேர்ப்பது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) தற்போது தீர்க்கமான சவாலாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்வது முதலாவது சவாலாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ரெணியில் ஒன்று சேர்ப்பதும் சஜித்துக்கு பாரதூரமான சவால் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கட்சிக்குள் இருந்து சிலர் நீங்கி சென்றுள்ள நிலையில் மேலும் சிலர் கட்சித் தலைவர் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.