உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த மேற்கண்ட முடிவை, சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைப்பாளர்களுக்கான நியமன நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.
”ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்க முடியும்.
அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிந்தளவு முயற்சித்தார். இணக்கப்பாடு எட்டப்பட்டு யானை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்." என தெரிவித்தார்.
இதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சிய நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை ஐ.தே.க.வுக்கு எழுச்சியில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிலரது செயற்பாடுகள் தொடர்பில் முன்னரே அறிந்து கொண்டதாலேயே நாம் அங்கிருந்து பிரிந்து சென்றோம். தலைமைத்துவத்தின் பண்பை அறிந்து கொண்டதால் தான் மிகவும் கவலையுடன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடிந்தது என அவர் தெரிவித்தார்.