நிஷாந்தவின் இல்லத்திற்கு விரைந்த ரணில் - கண்ணீர்விட்ட மஹிந்த

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ராஜாங்க அமைச்சரின் கொழும்பில் இல்லத்திற்கே ஜனாதிபதி சென்றுள்ளார்.

இதேவேளை சனத் நிஷங்கவின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்து பெருமளவு அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனத் நிஷந்தவின் வீட்டிற்கு சென்ற மகிந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அவரது மரணத்திற்கு கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறேன். அவர் அனைத்த நடவடிக்கைளிலும் துணையிருந்தார்.

கட்சி நடவடிக்கைகள் மாகாண சபை நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

அவரது இழப்பு எங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் மிப்பெரிய இழப்பாகும். அவர் தனது மாகாணத்திற்காக மட்டும் செயற்படவில்லை.

முழு நாட்டிற்காகவும் சேவை செய்தார். ஒரு இடத்திற்குள் மட்டுப்பட்ட சேவையை வழங்கவில்லை. கட்சியில் ஒரு தலைமைத்துவத்தை இழப்பதென்பது இலகுவான விடயமல்ல. அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

 சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (25.1.2024) மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26.1.2024) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி  ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.