உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்


அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விரும்பினால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை முதலில் உறுதியாக அறிவிக்க வேண்டும் என பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) ஏற்பாடு செய்திருந்த இரகசிய சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர், அமைச்சர்களை அழைத்திருந்தார், வெளியாட்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதற்கு அமைச்சர்கள் தவிர மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) எம்.பி.மாத்திரமே அழைக்கப்பட்டார்.

இந்தக் கலந்துரையாடலில், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அதனை நாட்டுக்கு முன் தமது கட்சிக்குத் தெரிவிக்க வேண்டும் என சீதா அரம்பேபொல(Sita Arambepola), அருந்திக பெர்னாண்டோ(Arundika Fernando) உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களை பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கவனத்தில் எடுத்ததாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்