ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறங்கியமையால் பரபரப்பு

 
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைத்துச் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இலங்கை விமானப் படைக்கு  சொந்தமான பெல் 412 ரக ஹெலிகொப்டர் பயணத்தில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போது எப்பாவல பகுதியில் வைத்து திடீரென தரையிறக்கப்பட்டது.

எனினும் இதன்போது எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஹெலிகொப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்

ஒரு மணி நேரத்தின் பின்னர், ஹெலிகொப்டர் மீண்டும் கொழும்புக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.