எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சின்னம் தற்போது அனைவரின் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியி;ட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு தீர்மானம் எடுங்கள் என தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, அனைத்து பிரஜைகளினதும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை செப்டெம்பர் 21 ஆம் திகதி பெற்றுத்தாருங்கள் என்றார்.
இதேநேரம் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் இன்று (15) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவளிப்பதாகத் அறிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளிக்கச் செல்வதற்கு முன்னர் கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக முன்னாள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம தெரிவித்தார்.
ஜனாதிபதியை நேற்று (14) பிற்பகல் சந்தித்து இது குறித்து தெரிவித்ததாகவும், நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்ட போது ஜனாதிபதியினால் சவாலை ஏற்று நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடிந்ததாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு தொடர்ந்தும் தேவைப்படுவதாகவும் ஸ்ரீயானி விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் ஷங்கரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஜனாதிபதியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக உறுதியளித்தார்.
அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவநந்தனவும் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாக உறுதியளித்தார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய தலைவர் என்பதனால் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க தீர்மானித்துள்ளதாகவும், வீழ்ச்சியடைந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஜனாதிபதி தனது செயற்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சியும் நேற்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து ஜனாதிபதியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி, தேசிய அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தின் பிரதான அழைப்பாளராகவும் இருப்பதோடு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அந்த அமைப்புகளுடன் இணைந்து அர்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.