ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதுர்யமாக காய்நகர்தலை முன்னெடுத்து வருவதாக அரசியல்மட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக தென்னிலங்கை மக்களை இலக்கு வைத்து பிரசார கூட்டங்களை ஆரம்பிக்க ரணில் திட்டமிட்டுள்ளார்.
அதற்கமைய மாத்தறையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ள பேரணிகளில் இது முதலாவது பேரணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் குழுவில் இந்த மக்கள் பேரணியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.