கோட்டாபயவை தொடர்பு கொண்ட ரணில் - இலங்கை திரும்புது உறுதியாகவில்லை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுத்த கோரிக்கையை அடுத்து அவர் கோட்டாபய ராஜபக்சவை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ரணிலை சந்தித்த பசில், கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி மக்கள் எதிர்ப்புக்களை எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தற்போது தாய்லாந்தில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் நாடு திரும்ப வசதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்வார் என என அவரது நெருக்கிய தரப்பினர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என்பது உறுதியாகிய நிலையில் அவர் வரும் திகதி இன்னும் உறுதியாக தெரியவரவில்லைப் என்பது குறிப்பிடத்தக்கது.