வடக்கின் புதிய ஆளுநரிடம் ரணில் கொடுத்துள்ள உறுதிமொழி


தாராள சிந்தனை கொண்ட அதிபரின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பதவிப்பிரமாணத்தின் பின் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை தருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க எங்களிடம் உறுதி அளித்திருக்கின்றார்.

தாராள சிந்தனை கொாண்ட ஒரு அதிபருக்கு கீழே வடமாகாணத்திலே ஆளுநராக பதவியேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மக்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றும்படியும் இது சம்பந்தமாக தொடர்ந்து கலந்துரையாடுமாறும் எம்மிடம் கூறி இருக்கின்றார்.

அதிபர் தருகின்ற கடமைகளை செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு மக்களுக்கு தேவையானவற்றை மக்கள் பிரதிநிதிகள் இணைந்து செய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” - என்றார்.