முருகனி்ன் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் தமிழக அரசு!

ராஜீவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்.

ஆனால் தமிழக அரசு அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில் கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு முருகனின் மனைவி நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது.

இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரை பலவந்தமாக அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என உயர்மன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ். தமிழக அரசின் இந்த சட்டவிரோத போக்கை கண்டிக்க வேண்டியவர்கள் இதுதான் சட்டநடைமுறை என தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.

இதே ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவர் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்தது சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறி லண்டன் சென்று, அங்கு அவர் குடியுரிமை பெற்று 2012ல் மரணமடைந்துள்ளார்.

இங்கு கேள்வி என்னவெனில் இதே ராஜிவ் காந்தி வழக்கில் இருந்த குறித்த நபர் லண்டன் வந்து வாழ இடங்கொடுத்த சட்டநடைமுறை இப்போது எப்படி முருகனுக்கு மறுக்கிறது என்பது தான்.

இந்நிலையில் தான் கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்தவகையில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயம் முருகனின் வேண்டுகோளை ஏற்று பிரித்தானியா செல்ல அனுமதி வழங்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.