தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ராஜித : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை


 
முன்னாள் அமைச்சர் ராஜித தசேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான கோப்புகளைத் தயாரித்து, கோரிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜித சேனாரத்ன இருந்த பல இடங்களுக்குக் கடந்த சில நாட்களாக அவரைக் கைது செய்யச் சென்ற போதிலும், அவர் அங்கு இல்லாமையால் கைது செய்யப்படவில்லை.

நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறது.

முன்னதாக, முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.