மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கும் சாத்தியம்மழையுடனான வானிலை இன்று(08) முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 1288 குடும்பங்களை சேர்ந்த 5162 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 83 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 54,569 குடும்பங்களை சேர்ந்த 206,203 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

60 வீடுகள் முழுமையாகவும் 5348 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

களுத்துறை, கொழும்பு, காலி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.