மழையுடனான வானிலை-டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.அத்துடன், கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 797 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.