மும்பை இந்தியன்ஸ் அணி நட்த்திர வீரருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர் குயிண்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதுதென்னாபிரிக்கா அணியின்  நட்த்திர வீரராக இருப்பவர்  குயிண்டன் டி காக்கு. இவர் ஐபி எல்லில் மும்பை  இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடுகின்றார்குயிண்டன் டி காக்குக்கும் சாஷா என்ற பெண்ணுக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில்  குயிண்டன் கும் சஷாக்கும் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை குயிண்டன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்குழந்தைக்கு கியாரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும்  குயிண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.