மஹிந்த ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல்!

அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.இந்த சம்பவம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற பல பேருந்துகள் நகரை விட்டு வெளியேற முற்பட்ட போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.