யாழில் உருவப் பொம்மை நடுவீதியில் தீயிட்டு எரிப்பு


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(19) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நாவுக்கான பிராந்திய அலுவலகத்துக்கு அருகில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நா அரங்கில் இலங்கை தொடர்பிலும், தமிழ் மக்கள் தொடர்பிலும் பொய்யான கருத்துக்களை அரசாங்கம் முன்வைப்பதை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன அழிப்பு வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், பீரிஸ் வீட்டுக்கு போ, பொய் சொல்லாதே போன்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீரிஸின் உருவப் பொம்மை நடுவீதியில் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், ஐ.நா. பிராந்திய அலுவலகத்தில் பொது அமைப்பிகளால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புகள், பொது மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.