ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தாதே... கொழும்பில் போராட்டத்தில் குதித்த தேரர்


பிரித்தானியாவின் சனல் 4 அலைவரிசையில் ராஜபக்ச மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட செய்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கம் இன்று (7) பிற்பகல் போராட்டம் நடத்தியது.

இந்த போராட்டமானது இன்று (7) பிற்பகல் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அங்குப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் அங்குபகல்ல சிறி ஜினானந்தா மகஜர் ஒன்றையும் கையளித்தார்.