திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்று நான்கில் ஒரு பங்கு பேருந்துகளே டீசல் வரிசையில் நிற்கின்றன.

டீசல் பிரச்சினை காரணமாக 3,500 பேருந்துகளே நாடளாவிய ரீதியில் தற்போது சேவையில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளை இவ்வழியாக கொண்டுசெல்ல முடியாது.

இந்த பிரச்சினைக்கான தீர்வினை இந்த வாரத்திற்குள்ளேயே எதிர்ப்பார்க்கின்றோம்.

பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த வாரத்திற்குள் டீசல் வழங்க முறையான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அரசாங்கம் இந்த வாரம் டீசல் வழங்குவதற்கு முறையான ஏற்பாட்டைச் செய்யாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவையில் ஈடுபடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.